Tuesday, January 4, 2011

அவல் சிற்றுண்டி

சிகப்பு தட்டையான அவல் கால் கிலோ
வெல்லம் ஒரு சிறிய கட்டி ( நூறு கிராம்)
சுக்கு ஒரு துண்டு
தேங்காய் அறை முடி

மிக்ஸியில் வெல்லம் துருவிய தேங்காய் மற்றும் சுக்கு என இவை எல்லாவற்றையும் போட்டு அரைத்தால் சுவையான அவல் பலகாரம் தயார்.

தக்காளி வெங்காயம் சட்னி

தக்காளி இரண்டு அல்லது மூன்று
வெங்காயம் ஒன்று பெரியது
காய்ந்த குண்டு மிளகாய் இரண்டு

மூன்று தேக்கரண்டி காய்ந்த எண்ணெயில் சிறிது கடுகு போட்டு வதக்கவும், அது பொரிந்ததும் உளுந்து ஒரு தேக்கரண்டி போட்டு வறுக்கவும், அதில் அறிந்து வைத்த தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும். இந்த வறுவலை ஆற வைத்து மிக்சியில் அறைதால் சட்னி ரெடி. இட்லி தோசைக்கு பொருத்தமான சுவையான சட்னி.